தேசிய குவாண்டம் திட்டத்தின் கீழ் 1,000 கி.மீ தூரத்திற்கான குவாண்டம் தகவல் தொடர்பு வலையமைப்பை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியுள்ளது.
இத்திட்டமானது 2023-24 முதல் 2030-31 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு ₹6,003 கோடி மதிப்பீட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (DST) தொடங்கப் பட்டது.
குவாண்டம் தகவல் தொடர்பானது, மிகவும் பாதுகாப்பான தரவுப் பரிமாற்றத்தை வழங்க குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது.
குவாண்டம் தகவல் தொடர்பு மையமானது, தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையத்துடன் (C-DOT) இணைந்து மதராஸின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தால் வழி நடத்தப் படுகிறது.