TNPSC Thervupettagam

விண்வெளிப் பயண தூரத்தில் சாதனை - ஆர்ட்டெமிஸ் II

April 11 , 2026 15 hrs 0 min 53 0
  • விண்வெளியில் மனிதர்கள் பயணித்த அதிகபட்ச தூரம் என்ற புதிய சாதனையை நாசாவின் ஆர்ட்டெமிஸ் II விண்வெளித் திட்டம் படைத்துள்ளது.
  • பூமியிலிருந்து சுமார் 252,756 மைல்கள் தூரம் பயணித்து, அப்பல்லோ 13 திட்டத்தின் சாதனையை இது முறியடித்துள்ளது.
  • 1972 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முதல் விண்வெளித் திட்டம் ஆர்ட்டெமிஸ் II ஆகும்.
  • ஓரியன் விண்கலத்தில் கனடா விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் இதில் பயணிக்கின்றனர்.
  • இத்திட்டமானது நிலவைச் சுற்றியுள்ள தடையில்லா திரும்புதல் பாதையை பின்பற்றுவதோடு, நிலவின் இருண்ட பகுதியைக் கவனிப்பதையும் உள்ளடக்கியது.
  • இது சூரிய கிரகணம் மற்றும் தற்காலிகத் தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்