February 27 , 2026
19 days
132
- கேரளாவின் பெயரை "கேரளம்" என்று மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- கேரள மாநிலச் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு உருவாக்கப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பின் சரத்து 3 இன் கீழ், கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2026 ஐ குடியரசுத் தலைவர் மாநிலச் சட்டமன்றத்திற்குப் பரிந்துரைப்பார்.
- அதன் கருத்துகளைப் பெற்ற பிறகு, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு குடியரசுத் தலைவரின் பரிந்துரையை மத்திய அரசு கோரும்.
- அரசியலமைப்பின் சரத்து 3, தற்போதுள்ள எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் சட்டப் படி மாற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

Post Views:
132