இந்தியாவானது முதல்முறையாக 'கைபேசி சேவை செயலிப் பட்டியல்' எனப்படும் ஒரு செயலிப் பட்டியலை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.
இந்த இந்தியச் செயலிப் பட்டியல் ஆரம்ப கட்டங்களில் இலவசமாக கிடைக்கும்.
இது இந்திய அரசுக்குச் சொந்தமான, கைபேசி செயலிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு தளமாகும்.
இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY - Ministry of Electronics and Information Technology) தொடங்கப்பட்ட ஒரு புதுமையான முயற்சியாகும்.
மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையம் (CDAC - Centre for Development of Advanced Computing) இதைச் செயல்படுத்துகிறது.
அனைத்து மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசுத் துறைகள் மற்றும் முகவர் நிறுவனங்கள் ஆகியவை கைபேசி வழித்தடங்கள் வழியாக தங்கள் சேவைகளை வழங்க இது வழிவகை செய்கின்றது.
கைபேசி செயலிகளை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும்.
இந்தியச் செயலிகள் சந்தை குறித்த புள்ளிவிவர அறிக்கை 2021 என்ற அறிக்கையின் படி, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் உள்ள செயலிகளில் சுமார் 5 சதவீத செயலிகள் இந்தியர்கள் உருவாக்கியதாகும்.