உத்தரகாண்ட் வழியாக கைலாஷ் மானசரோவரை வேகமாகச் சென்று அடைய ஒரு புதிய சாலைக்கான பணிகள் முடிவடைந்தன.
கைலாஷ் மானசரோவர் என்பது திபெத்தின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புண்ணிய யாத்திரைத் தளமாகும்.
பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் இந்தச் சாலையை திறந்து வைத்தார்.
இது கடல் மட்டத்திலிருந்து 17,000 அடி உயரத்தில் இந்திய-சீன எல்லையில் உள்ள லிபுலேக் கணவாய் (உத்தரகாண்ட்) வரை அமைக்கப் பட்டிருக்கிறது.
இது உத்தரகாண்டின் பித்தோராகரில் உள்ள தர்ச்சுலா என்ற நகரத்துடன் அந்தக் கணவாயை இணைக்கிறது.
எல்லைச் சாலைகள் அமைப்பானது (BRO - Border Roads Organisation) இந்தத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா, சீனா மற்றும் நேபாளத்தின் முக்கோணச் சந்திப்புக்கு அருகில் லிபுலேக் கணவாய் உள்ளது.
6638 மீட்டர் உயரமுடைய கைலாஷ் சிகரம் இமயமலையின் கைலாஷ் வரம்பில் இருக்கும் ஒரு உயர்ந்த சிகரமாகும். கைலாஷ் வரம்பு என்பது சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் இருக்கும் இமயமலையின் வெளிப்புறப் பிரிவில் ஒரு பகுதியாகும்.
கைலாஷ் சிகரம் போன் மதம், புத்த மதம், இந்து மதம் மற்றும் சமண மதம் ஆகிய நான்கு சமயங்களுக்கு புனிதத் தளமாகக் கருதப்படுகின்றது.
இச்சிகரம் சிந்து மற்றும் பிரம்மபுத்திரா நதிகளின் மூலமான மானசரோவர் ஏரி மற்றும் சட்லஜ் நதியின் மூலமான ராகாஸ்தல் ஏரி ஆகியவற்றுக்கு அருகில் உள்ளது.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை உத்தரகாண்ட்டில் இருக்கும் லிபுலேகா கணவாய் மற்றும் சிக்கிமில் இருக்கும் நாதுலா கணவாய் ஆகிய இரு வழிகளில் மேற்கொள்ளப் படுகின்றது.