TNPSC Thervupettagam

கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2025

May 1 , 2025 20 days 51 0
  • இந்த யாத்திரையானது லிபுலேக் மற்றும் டெம்சோக் வழியான மிகவும் சாத்தியமான வழிகளுடன், ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட அடுத்தடுத்தப் பதட்டச் சூழல்கள் காரணமாக 2020 ஆம் ஆண்டு முதல் இந்த யாத்திரையானது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
  • இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசுமுறை உறவுகளின் 75 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்த யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது.
  • இது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியுறவு அமைச்சகத்தினால் (MEA) ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இது உத்தரகாண்டில் உள்ள லிபுலேக் கணவாய் (1981 ஆம் ஆண்டு முதல்) மற்றும் சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் (2015 ஆம் ஆண்டு முதல்) ஆகிய இரண்டு அதிகாரப் பூர்வ வழிகள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.
  • டெம்சோக் என்பது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் உள்ள சர்ச்சைக்குரிய இந்திய நிர்வாகத்தின் டெம்சோக் துறையில் உள்ள ஒரு கிராமம் மற்றும் இராணுவ முகாம் ஆகும்.
  • இந்தியாவின் லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் லே என்ற மாவட்டத்தில் உள்ள நியோமா தெஹ்சிலின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்படுகின்ற இந்தப் பகுதியானது திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு பகுதியாக சீனாவினால் உரிமை கோரப்படுகிறது.
  • புனித மலைவாழ்த் தளமான கையிலாயம் மற்றும் மானசரோவர் புனித ஏரி ஆகியன திபெத்தில் அமைந்துள்ளன.
  • இது சிவன் மற்றும் மாதா பார்வதியின் இருப்பிடமாக நம்பப்படுகிறது.
  • இது இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் போன்களால் (திபெத்தின் பூர்வீக சமயம்) புனித சிகரமாகக் கருதப்படுகிறது.
  • சட்லஜ், பிரம்மபுத்திரா, கமலி மற்றும் சிந்து நதிகள் இங்கு உருவாவதால் புவியின் ஆன்மீக மையமாக கையிலாய மலை கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்