TNPSC Thervupettagam

கொள்கைக்கான 3 கணக்கெடுப்புகள் – RBI

July 15 , 2026 11 days 124 0
  • பணவியல் கொள்கை முடிவுகளுக்கான தரவுகளைச் சேகரிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூன்று முக்கிய கணக்கெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
  • குடும்பங்களின் பணவீக்க எதிர்பார்ப்பு கணக்கெடுப்பு, ஊரக நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு மற்றும் நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு ஆகியவை இந்தக் கணக்கெடுப்புகளில் அடங்கும்.
  • பணவீக்க எதிர்பார்ப்பு கணக்கெடுப்பானது, 19 நகரங்களில் அடுத்த மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கான விலை மாற்றங்கள் மற்றும் பணவீக்கம் குறித்த குடும்பங்களின் கருத்துக்களை ஆய்வு செய்கிறது.
  • ஊரக நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பானது, 31 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் (UTs) உள்ள ஊரக மற்றும் புறநகர் குடும்பங்களிடமிருந்து பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம், விலைகள் மற்றும் செலவினங்கள் குறித்த கருத்துக்களைச் சேகரிக்கிறது.
  • நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பானது, 19 நகரங்களில் பொருளாதார நிலைமைகள், வேலைவாய்ப்பு, விலைகள், வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்த குடும்பங்களின் கருத்துக்களைச் சேகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்