TNPSC Thervupettagam

சேவைகள் உற்பத்திக் குறியீடு

July 14 , 2026 12 days 107 0
  • இந்தியாவின் வரவிருக்கும் சேவைகள் உற்பத்திக் குறியீடு (ISP), சரக்கு மற்றும் சேவை வரி (GST) தரவு, நிர்வாகத் தரவு மற்றும் ஆய்வுகளைப் பயன்படுத்தி அமைப்புசார் சேவைகள் துறையின் உற்பத்தியை அளவிடும்.
  • இந்தக் குறியீடு இந்தியாவின் அமைப்புசார் சேவைத் துறை உற்பத்தியை அவ்வப் போது அளவிடுவதற்கான முதல் முயற்சியாக அமையும்.
  • இதற்கு GST தரவு முதன்மை ஆதாரமாக இருக்கும், அதே வேளையில் GST வரம்பிற்குள் வராத துறைகளுக்கு நிறுவன சேவைகள் துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு (ASISSE) மற்றும் நிர்வாகத் தரவுகள் துணைபுரியும்.
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ரயில்வே துறை வாரியம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆகியவை நிர்வாகத் தரவு ஆதாரங்களில் அடங்கும்.
  • ISP-இன் முதல் வெளியீடு 2026 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, என்பதோடு இது அமைப்புசார் சேவைகள் துறையை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்