பணவியல் கொள்கை முடிவுகளுக்கான தரவுகளைச் சேகரிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூன்று முக்கிய கணக்கெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
குடும்பங்களின் பணவீக்க எதிர்பார்ப்பு கணக்கெடுப்பு, ஊரக நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு மற்றும் நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு ஆகியவை இந்தக் கணக்கெடுப்புகளில் அடங்கும்.
பணவீக்க எதிர்பார்ப்பு கணக்கெடுப்பானது, 19 நகரங்களில் அடுத்த மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கான விலை மாற்றங்கள் மற்றும் பணவீக்கம் குறித்த குடும்பங்களின் கருத்துக்களை ஆய்வு செய்கிறது.
ஊரக நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பானது, 31 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் (UTs) உள்ள ஊரக மற்றும் புறநகர் குடும்பங்களிடமிருந்து பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம், விலைகள் மற்றும் செலவினங்கள் குறித்த கருத்துக்களைச் சேகரிக்கிறது.
நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பானது, 19 நகரங்களில் பொருளாதார நிலைமைகள், வேலைவாய்ப்பு, விலைகள், வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்த குடும்பங்களின் கருத்துக்களைச் சேகரிக்கிறது.