TNPSC Thervupettagam

கொள்ளை நோய் மேலாண்மை குறித்த பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) ஆய்வு

December 15 , 2020 1617 days 585 0
  • கோவிட்-19 தொற்றை மேலாண்மை செய்த மாநிலங்களின் பட்டியலில் வடகிழக்கு மாநிலங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
  • இதற்கு அடுத்து இதில் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தப் பட்டியலில் இராஜஸ்தான், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
  • இந்தப் பட்டியலில் வடகிழக்குப் பிராந்தியமானது நுண் பொருளாதாரக் குறிகாட்டிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதற்கு அடுத்து இதில் இமாச்சலப் பிரசேதம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தப் பிரிவில் பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.
  • மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை முதலிடங்களைப் பிடித்துள்ளன.
  • இதில் கோவா, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.
  • இந்த அளவீட்டிற்காக ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டைத் திட்டம், பிரதான் மந்திரி சுவநிதி, பிரதான் மந்திரி சம்மன், அவசர கால கடன் இணைப்பு உத்தரவாதத் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஆகிய 5 திட்டங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டன.
  • இதில் அனைத்துத் திட்டங்களிலும் வடகிழக்குப் பகுதி ஆனது முதலிடத்தைப் பிடித்து உள்ளது. இதற்கு அடுத்து இதில் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இதில் சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்