பாரத் பயோடெக் நிறுவனமானது தனது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட கோவிட்- 19 தடுப்பு மருந்தான “கோவாக்ஸின்” என்பதற்காக இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டகத்திடம் (DGCI - Drugs Controller General of India) நெருக்கடி காலப் பயன்பாட்டு ஒப்புதலுக்காக விண்ணப்பித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலம், பைசர் மற்றும் சீரம் இந்திய நிறுவனம் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் நெருக்கடி காலப் பயன்பாட்டிற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பித்த மூன்றாவது நோய்த் தடுப்பு நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஆகும்.
கோவேக்ஸின் ஆனது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே மேம்படுத்தப் பட்டுள்ளது.
ஐக்கியப் பேரரசு மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றில் ஒப்புதல் பெற்ற பின்பு இந்தியாவில் அதற்காக விண்ணப்பித்த முதலாவது நிறுவனம் பைசர் (இந்தியா) ஆகும்.
நெருக்கடி காலப் பயன்பாட்டிற்காக விண்ணப்பித்த இரண்டாவது நிறுவனம் சீரம் இந்தியா என்ற ஒரு நிறுவனமாகும்.
சீரம் இந்தியா என்ற நிறுவனமானது கோவிட்ஷீல்டு நோய்த் தடுப்பு மருந்தின் ஒப்புதலுக்காக விண்ணப்பித்துள்ளது.
இது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா ஆகியவற்றினால் இணைந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.