March 27 , 2026
15 hrs 0 min
4
- ஆரம்பகால பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் 1 செ.மீ நீளமுள்ள புதை படிவத்தை கோபி பாலைவனத்தில் அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
- இந்த புதைபடிவம் சுமார் 100 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பிற்கால கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த ஒரு நுண்-பாலூட்டிக்கு உரியது.
- இது உகா டோல்கோட் பகுதியில் கிட்டத்தட்ட முழுமையான எலும்புக் கூட்டுடன் கண்டறியப் பட்ட இது மிகவும் அரிதான ஒன்றாகும்.
- இந்த இனம் வெலோசிராப்டர் போன்ற டைனோசர்களுடன் இணைந்து வாழ்ந்தது.
- நீண்ட கால வறட்சிச் செயல்முறை மற்றும் மணலால் விரைவாக புதைக்கப்பட்டதன் காரணமாக இது சிதையாமல் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
Post Views:
4