TNPSC Thervupettagam

289 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஊர்வன தோல் படிமம்

March 24 , 2026 3 days 28 0
  • அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் கண்டறியப்பட்ட ஒரு அரிய ஊர்வன தோல் படிமம், நிலப்பரப்பில் நிலவிய ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய புதிய ஆதாரங்களை வழங்குகிறது.
  • ரிச்சர்ட்ஸ் ஸ்பர் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட இந்தப் படிமம் சுமார் 289 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.
  • இது வரை அறியப்பட்டவற்றிலேயே மிகவும் பழமையான ஊர்வன தோல் படிமமாகக் கருதப்படும் இது தோல் பரிணாம வளர்ச்சியின் காலவரிசையைப் பின்னோக்கித் நகர்த்துகிறது.
  • நவீன முதலைகளைப் போன்ற செதில்களைக் கொண்டுள்ள இந்தத் தோல் அந்த உயிரினங்கள் ஆரம்பகாலத்திலேயே நிலப்பரப்பில் வாழப் பழகியதைக் காட்டுகிறது.
  • குறைந்த ஆக்சிஜன், மெல்லிய களிமண் படிவு மற்றும் இயற்கை எண்ணெய் போன்ற சிறப்பான சூழல் இந்த மென்மையான திசுக்கள் அழியாமல் பாதுகாக்க உதவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்