TNPSC Thervupettagam

கோமதி நதி புத்துயிர்ப்புத் திட்டம்

October 18 , 2025 15 hrs 0 min 18 0
  • உத்தரப் பிரதேச முதலமைச்சர் கோமதி நதியின் தூய்மையான மற்றும் தொடர்ச்சியான ஓட்டத்தை மீட்டெடுப்பதற்காக கோமதி நதி புத்துயிர்ப்புத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளார்.
  • பிலிபிட் முதல் காஜிபூர் வரையில், கோமதி நதியில் பாயும் நகர்ப்புறக் கழிவுநீரில் 95 சதவீதத்தினை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இது தொடங்கப்பட்டுள்ளது.
  • தற்போது, ​​39 முக்கிய வடிகால்கள் இந்த நதியில் பாய்கின்றன என்ற நிலையில் அவற்றுள் 13 சுத்திகரிக்கப் படாமல் ஆற்றில் பாய்கின்றன; இவை புதிய மற்றும் மேம்படுத்தப் பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் திருப்பி விடப்படும் அல்லது சுத்திகரிக்கப்படும்.
  • இந்தத் திட்டத்தில் ஈரநில மேம்பாடு, ஆற்றங்கரை அழகுபடுத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் ஆற்றங்கரைகளில் பசுமைப் பரப்பை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்