கோவிட்-19 மாதிரிகளைச் சேகரிக்கும் புதிய தொழில்நுட்பம்
May 3 , 2021 1540 days 623 0
செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநரான ராகேஷ் மிஷ்ரா, கோவிட் – 19 மாதிரிகளைச் சேகரிப்பதற்கான ஒரு புதிய உலர்ந்த ஸ்வாப் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
உலர்ந்த ஸ்வாப் தொழில்நுட்பத்தின் மூலம் கோவிட்-19 மாதிரிகளைச் சேகரிக்கும் முறையானது நோய்க்கிருமியை ஒரு ஊடகம் மூலம் எடுத்துச் செல்லும் முறையினைப் போன்று அல்லாது நாசியிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்வாப் மாதிரிகளை உலர் நிலையில் வைத்து சோதனைக்குக் கொண்டு செல்லும் முறையாகும்.
நோய்க்கிருமியை ஒரு ஊடகம் மூலம் எடுத்துச் செல்லும் முறையில் (Viral Transport Medium – VTM) வைரஸ் மேலும் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
உலர்ந்த ஸ்வாப் மூலம் மாதிரி சேகரித்தல் (Dry Swab Technique) முறையானது பாதுகாப்பான, விரைவான, மலிவான மற்றும் மிகவும் துல்லியமான முறையாகும்.