இந்தியா முழுவதிலும் உள்ள 500 நகரங்கள் தங்களை ‘சஃபை மித்ரா சுரக்சித் ஷெஹர்’ என்று அறிவித்துள்ளன.
இந்த நகரங்கள் அனைத்தும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட நிறுவனம் சார்ந்த திறன், உபகரண விதிமுறைகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு போதுமான நிலையை எட்டி உள்ளன.
இந்த அனைத்து நகரங்களும் தற்போது சஃபாய் மித்ராக்கள் என்ற துப்புரவுப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான பணிச் சூழலை வழங்குகின்றன.
"சஃபாய் மித்ரா சுரக்சித் ஷெஹர்" ஆனது நகர்ப்புறத் தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் நிலையான முறையிலான துப்புரவு நடைமுறைகளை செயல்படுத்தச் செய்வதை ஊக்குவிக்கும் இலக்குடன் இணக்கமான முறையில் அறிவிக்கப்பட்டது.