நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரத் துறையானது, 2025 ஆம் ஆண்டு சட்டப் பூர்வ அளவியல் (பொதி கட்டப்பட்ட பொருட்கள்) திருத்த விதிகளை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதியன்று அறிவித்தது.
இந்தத் திருத்தம் மருத்துவ சாதனங்களைக் கொண்ட பொதிகளுக்கான 2011 ஆம் ஆண்டு சட்டப் பூர்வ அளவியல் (பொதி கட்டப்பட்ட பொருட்கள்) விதிகளை 2017 ஆம் ஆண்டு மருத்துவச் சாதன விதிகளுடன் இணைக்கிறது.
மருத்துவச் சாதனப் பொதிகளுக்கு, எண்கள் மற்றும் எழுத்துக்களின் எழுத்துரு உயரம் மற்றும் அகலம் ஆனது 2017 ஆம் ஆண்டு மருத்துவ சாதன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று விதிகள் குறிப்பிடுகின்றன.
மருத்துவ சாதனப் பொதிகளில் உள்ள அறிவிப்புகள் சட்டப் பூர்வ அளவியலின் கீழ் முதன்மை காட்சிப் பலகைத் தேவைகளுக்குப் பதிலாக மருத்துவச் சாதன விதிகளின் படி உருவாக்கப்படலாம்.
நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஒழுங்குமுறை சார்ந்த குழப்பத்தைக் குறைக்கவும் மருத்துவ சாதனங்களுக்கான ஒற்றை, தெளிவான மற்றும் நிலையான முத்திரையிடல் தரநிலையை இந்தத் திருத்தம் உறுதி செய்கிறது.