TNPSC Thervupettagam

சட்டப்பூர்வ அளவீடுகள் (சரக்குப் பொதிகள்) விதிகள், 2011 திருத்தம்

November 11 , 2021 1346 days 511 0
  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகமானது 2011 ஆம் ஆண்டிற்கான  சட்டப் பூர்வ அளவீடுகள் (சரக்குப் பொதிகள்) விதிகளைத் திருத்தி அமைத்துள்ளது.
  • இதனால் அனைத்து நிறுவனங்களும் தற்போது சரக்குப் பொதிகளில் ஒரு அலகின் விற்பனை விலையை அச்சிட வேண்டும்.
  • இந்தப் புதியத் திருத்தமானது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்.
  • இந்த நடவடிக்கை மூலம், நுகர்வோர்கள் அலகின் அடிப்படையில் விலையைக் கண்டறிவது எளிதாக இருக்கும்.
  • இந்தத் திருத்தத்தின் கீழ், ஒரு கிலோகிராமிற்கும் அதிகமாக சரக்குப் பொதிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அவற்றின் அதிகபட்ச சில்லறை விலையுடன் ஒரு கிலோகிராமிற்கான ஒரு அலகின் விலையையும் அச்சிட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்