சந்திரனுக்கான வர்த்தகரீதியான முதல் தரையிறங்கு வாகனம்
December 28 , 2022 965 days 531 0
ஜப்பானின் விண்வெளிசார் புத்தொழில் நிறுவனம் சமீபத்தில் சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது.
இது அந்த நாட்டிற்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கும் முதலாவதாக இருக்கும் ஒரு செயல்பாடாகும்.
ஜப்பானின் இஸ்பேஸ் நிறுவனத்தின் ஹக்குடோ-R எனும் இந்த விண்வெளிப் பயணம் அமெரிக்காவில் புளோரிடாவின் கேப் கனவெரலில் இருந்து ஏவப்பட்டது.
இன்று வரையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் அரசு விண்வெளி அமைப்புகள் மட்டுமே நிலவில் மென்மையான தரையிறக்கத்தை நிகழ்த்தியுள்ளன.
நிலவில் தரையிறங்கிய M1 வாகனம், ஜப்பானின் JAXA விண்வெளி அமைப்பின் இரு சக்கரம் கொண்ட பேஸ்பால் அளவிலான உலவியையும், ஐக்கிய அரபு அமீரகத்தால் தயாரிக்கப்பட்ட நான்கு சக்கரம் கொண்ட ரஷித் உலவியையும் பயன்படுத்தும்.