சப்கா விஸ்வாஸ் - மரபுசார் பிரச்சினை தீர்வுத் திட்டம், 2019
August 24 , 2019 2173 days 808 0
2019-20 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சப்கா விஸ்வாஸ் மரபுசார் பிரச்சினை தீர்வுத் திட்டம், 2019ற்கான அறிவிக்கை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
இது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தப் படவிருக்கின்றது. இது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை செயல்படுத்தப் படும்.
தற்பொழுது சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் உட்படுத்தப் பட்டுள்ள பழைய சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி தொடர்பாக “நிலுவையில் உள்ள வரிப் பிரச்சினைகளை” தீர்ப்பதற்கானத் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான வரி செலுத்துவோர் பயன்படுத்திட வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கின்றது.