TNPSC Thervupettagam

சமுதாய விதை வங்கிகளுக்கான தரநிலை - IS 20201:2026

June 14 , 2026 15 hrs 0 min 52 0
  • இந்தியாவில் சமுதாய விதை வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டுப் பயிர் வகைகளைப் பாதுகாப்பதற்கும் இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) IS 20201:2026 என்ற புதிய தரநிலையை வெளியிட்டுள்ளது.
  • சமுதாய விதை வங்கிகள் பாரம்பரிய மற்றும் உள்ளூர் விதை வகைகளைச் சேகரிக்கவும், சேமிக்கவும் மற்றும் பரிமாறிக் கொள்ளவும் உதவுகின்றன.
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை தாங்குதிறன் ஆகியவற்றிற்கு முக்கியமான உள்நாட்டுப் பயிர் வகைகளைப் பாதுகாப்பதை இந்தத் தரநிலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வறட்சி தாங்குதிறன், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் சிறந்த ஊட்டச்சத்து போன்ற குணங்களைக் கொண்ட விதைகளை இது ஊக்குவிக்கிறது.
  • இந்த வழிகாட்டுதல்கள் விதைகளைச் சேகரித்தல், சேமித்தல், பரிசோதித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு செயல்முறைகளை உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்