நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் ஆனது பிரதமரின் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பங்கேற்புடன் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி தொலைநோக்குப் பார்வையான "விக்சித் பாரத் @2047" என்பதன் மீது இக்கூட்டம் கவனம் செலுத்தியது.
இக்கூட்டத்தின் கருத்துரு "Inclusive Human Development for Viksit Bharat @2047" என்பதாகும்; இது இந்தியா முழுவதும் சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
கொள்கை மற்றும் மேம்பாட்டுத் திட்டமிடலுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் கூட்டுறவுக் கூட்டாட்சியை இது ஊக்குவிக்கிறது.
பெண்கள் அதிகாரமளித்தல், வேளாண் சீர்திருத்தங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கிய கவனத்துறைகளாக இருந்தன.
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக விரைவான குறைதீர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பது ஆகியவற்றையும் இது வலியுறுத்தியது.