TNPSC Thervupettagam

சமுத்திர சேது II நடவடிக்கை

May 5 , 2021 1535 days 694 0
  • இந்தியக் கடற்படையானது சமீபத்தில் சமுத்திர சேது – II என்ற நடவடிக்கையினை தொடங்கி உள்ளது.
  • நாட்டின் ஆக்சிஜன் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்.
  • இந்த நடவடிக்கையின் கீழ், திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் கொள்கலன்களைக் கொண்டு செல்ல  போர்க் கப்பல்கள் பயன்படுத்தப் படுகின்றன.
  • ஐ.என்.எஸ் தால்வார் எனும் கப்பலானது மனாமாவிலிருந்து மும்பைக்கு 40 மில்லியன் டன் ஆக்சிஜனைக் கொண்டு செல்ல உள்ளது.
  • ஐ.என்.எஸ். கொல்கத்தா எனும் கப்பலானது முதலில் தோஹாவிற்குச் சென்று மருத்துவம் சார்ந்த பொருட்களைப் பெற்று பின்னர் திரவ ஆக்சிஜன் கலன்களைப் பெறுவதற்கு வேண்டி குவைத் நாட்டிற்குச் செல்ல உள்ளது.
  • .என்.எஸ். ஐராவத் எனும் கப்பலானது திரவ ஆக்சிஜன் கலன்களைப் பெறுவதற்காக சிங்கப்பூருக்குச் செல்கிறது.
  • .என்.எஸ். ஜலஷ்வா எனும் கப்பலும் இந்தத் திட்டத்திற்கு வேண்டி பயன்படுத்தப்பட உள்ளது.
  • தெற்குக் கடற்படைக் குழுவின் ஐ.என்.எஸ். சார்துல் எனும் கப்பலும் இந்த நடவடிக்கையில் இணைய தயாராக உள்ளது.
  • இந்த நடவடிக்கையானது ஏற்கனவே இந்திய இரயில்வேயினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்சிஜன் விரைவு இரயில் திட்டத்திற்கு உந்தமளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்