இந்திய இராணுவமானது வடக்கு சிக்கிமில் அமைக்கப்பட்டுள்ள 56 KVA (கிலோ வோல்ட் – ஆம்பியர்) திறனுடைய தனது முதலாவது பசுமை சூரிய ஆற்றல் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்தது.
இந்த ஆலையானது வனேடியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மின்கல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுகிறது.
இந்த ஆலை 16000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆலையானது பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன்
(IIT – Mumbai) இணைந்து நிறைவு செய்யப்பட்டுள்ளது.
IIT மும்பையின் பேராசிரியர் பிரகாஷ் கோஷ் ஆகியோரால் தலைமையிலான ஒரு குழு மற்றும் இந்திய இராணுவ வீரர்கள் ஆகியோரால் இந்த ஆலை நிறைவு செய்யப் பட்டுள்ளது.