சரயு கால்வாய் தேசியத் திட்டம்
December 12 , 2021
1351 days
770
- உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சரயு கால்வாய் தேசியத் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
- சரயு கால்வாய் திட்டம் உத்தரப் பிரதேசத்தின் மிகப்பெரியத் திட்டமாகும்.
- இது கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் 9 மாவட்டங்களிலுள்ள சுமார் 25 முதல் 30 லட்சம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும்.
- இத்திட்டத்தின் கீழ், காக்ரா, ரப்தி, பன்கங்கா, சரயு மற்றும் ரோஹினி ஆகிய 5 நதிகள் இணைக்கப் பட்டுள்ளன.
- மொத்தம் 6,600 கி.மீ. நீளமுடைய இந்த கால்வாய்கள், 318 கி.மீ. நீளமுடைய பிரதான கால்வாயுடன் இணைக்கப்பட உள்ளன.

Post Views:
770