சரஸ்வதி ஆறு பற்றிய பல்துறை சம்பந்தப்பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்காக ஒரு ஆலோசனைக் குழுவினை புனரமைத்துள்ளதாக இந்தியத் தொல்லியல் துறை கூறி உள்ளது.
சரஸ்வதி ஆறு காகர் – ஹாக்ரா ஆறு எனவும் அழைக்கப்படுகிறது.
இக்குழு அடுத்த இரண்டு ஆண்டுக் காலத்திற்கு (2021-2023) செயல்படும் வகையில் புனரமைக்கப் பட்டுள்ளது.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் இக்குழுவின் தலைவர் ஆவார்.
சுற்றுச்சூழல் மாற்றங்கள், சரஸ்வதி ஆற்றின் தொடக்க கால வரலாறு குறித்த ஆழ்ந்த தரவுகளைக் கொண்ட தொல்லியல் கலாச்சார வரலாறு போன்றவற்றைப் பற்றிய ஆய்வு செய்ய இக்குழுவானது தொலை நுண்ணுணர்வு பதிமங்களைப் பயன்படுத்த உள்ளது.