- நாட்டில் புயலால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்வதற்காக மத்திய அரசால் இது தொடங்கப் பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் நோக்கம், இந்தியாவில் கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் புயலால் ஏற்படும் தாக்கங்களைத் தணிப்பதற்காக கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு சாரா நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும்.
இத்திட்டத்தை பற்றிய தகவல்கள்
- இத்திட்டம் அந்தந்த மாநில அரசுகள் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினால் (NDMA) அமல்படுத்தப் படும்.
- வெவ்வேறு வகையில் புயலால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய 13 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை இத்திட்டம் அடையாளம் கண்டுள்ளது.
- இத்திட்டத்திற்கு உலக வங்கி நிதி உதவிகளை வழங்கும்.
- இந்த மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
- பிரிவு – I : அதிக பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் – ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்.
- பிரிவு – II : குறைவாக பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் – மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, கோவா, பாண்டிச்சேரி, லட்சத்தீவுகள், டாமன் மற்றும் டையூ, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள்.