TNPSC Thervupettagam

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பிராந்தியத் தரநிலை நிர்ணய மன்றம்

August 10 , 2022 1073 days 478 0
  • ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்திற்கான சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் பிராந்தியத் தரநிலை நிர்ணய மன்றமானது புதுடெல்லியில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது தகவல் தொடர்பு அமைச்சகத்தினால் நடத்தப்படுகிறது.
  • இந்த மன்றத்தின் கருத்துரு "தொலைத் தொடர்புகளின் ஒழுங்குமுறை மற்றும் கொள்கை அம்சங்கள்" என்பதாகும்.
  • சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் என்பது 1865 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி அன்று நிறுவப்பட்ட, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும்.
  • தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்கள் தொடர்பான விடயங்களுக்கு இது பொறுப்பு மிக்க நிறுவனமாகும்.
  • இது "சர்வதேச தந்தி ஒன்றியம்" ஆக நிறுவப் பட்டது.
  • இதன் தற்போதையப் பெயர் ஆனது 1934 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்