TNPSC Thervupettagam

சர்வதேச நடுவண் தீர்ப்பாய அமைப்பு (IOMed)

June 6 , 2025 7 days 30 0
  • சீன அரசாங்கமும் பிற 32 நாடுகளும் ஹாங்காங்கில் ஒரு சர்வதேச நடுவண் தீர்ப்பாய அமைப்பை (IOMed) நிறுவுவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது "சர்வதேச தகராறுகளை நடுவண் தீர்ப்பாயம் மூலம் நன்கு தீர்ப்பதற்காக என்று அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அரசுகளுக்கிடையேயான சர்வதேசச் சட்டப்பூர்வ அமைப்பு" என்று விவரிக்கப்பட்டது.
  • அதன் அந்தஸ்து ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளான சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு இணையாக இருக்கும்.
  • ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 33வது பிரிவு ஆனது, பேச்சுவார்த்தை, விசாரணை, நடுவம், சமாதானம், சமரசம், நீதித்துறைசார் தீர்வு அல்லது இதர பிற அமைதியான வழிமுறைகள் மூலம் பல்வேறு சர்வதேசத் தகராறுகளை மிக அமைதியான முறையில் தீர்க்க வழங்குகிறது.
  • இது வரையில் தகராறுகள் தீர்வுக்கான நடுவண்/மத்தியஸ்த முறைக்கு நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பு எதுவும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்