இந்திய அரசு “சாகர் திட்டம்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இது மாலத்தீவு, மொரீஷியஸ், மடகாஸ்கர், செசல்ஸ் மற்றும் கோமரோஸ் ஆகிய நாடுகளுக்கு உணவுப் பொருட்கள், கோவிட் – 19 தொடர்பான ஆயுர்வேத மருந்துகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் (HCQ) மாத்திரைகள் ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் மேற்கொள்ளப் படுகின்றது.
இது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தொலை நோக்குத் திட்டமான “சாகர்” (SAGAR - Security and Growth for All in the Region) என்பதின் கீழ் மேற்கொள்ளப் படுகின்றது.
2015 ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய “சாகர்” என்ற இந்தியப் பெருங்கடலின் மீதான தனது தொலைநோக்குத் திட்டத்தை இந்தியாவானது தொடங்கியது.