2025 ஆம் ஆண்டு சாணக்கியா பாதுகாப்புப் பேச்சுவார்த்தை ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு: "Reform to Transform: Sashakt, Surakshit aur Viksit Bharat” (Empowered, Secure and Developed India) என்பதாகும்.
பாதுகாப்பு துறையின் சீர்திருத்தங்கள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, உள்நாட்டுமய மாக்கல் மற்றும் இந்தியாவிற்கான உத்தி சார் தன்னிறைவு பற்றி விவாதிப்பதே இதன் நோக்கமாகும்.
2047 ஆம் ஆண்டிற்குள் இந்திய இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான ஒரு செயல் திட்டத்தினை இந்தப் பேச்சுவார்த்தை அறிவித்தது.
HOP 2032 ஆனது உடனடி மேம்பாடுகள் மற்றும் வழக்கமான அச்சுறுத்தல்களுக்குத் தயாராக இருப்பதில் கவனம் செலுத்துகிறது.
STEP 2037 ஆனது செயற்கை நுண்ணறிவு, இணையவெளித் தாக்குதல் மற்றும் வலை அமைப்புச் செயல்பாடுகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைச் சேர்க்கிறது.
JUMP 2047 ஆனது முழு நவீனமயமாக்கல், பல துறை மேன்மை மற்றும் உத்தி சார் சுயாட்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் கவனம் செலுத்தும் பகுதிகளில் பல-களப் போர் தயார்நிலை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையவெளித் திறன்கள், பொது-இராணுவ ஒத்துழைப்பு மற்றும் விரைவான பாதுகாப்பு கொள்முதல் ஆகியவை அடங்கும்.