மாநிலம் சார்ந்த ஒரு சாதிவாரிக் கணக்கெடுப்பினை நடத்த பீகார் மாநிலம் திட்டம் தீட்டியுள்ளது.
பிரச்சினை
2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பில் பதிவான சாதி வாரியான தரவுகள் “பயனற்றது” என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.
ஆனால் 2016 ஆம் ஆண்டில் இந்தியத் தலைமைப் பதிவு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் 98.87% என்ற அளவில் தனிப்பட்ட சாதி மற்றும் சமயம் பற்றிய தரவானது “பிழையற்றது” என கிராமப்புற வளர்ச்சிக்கான நிலைக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.
ஏன் “பயனற்றது”?
1931 ஆம் ஆண்டில் பதிவான மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,147 என்றும், அதே சமயம் 2011 ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் 46 லட்சத்திற்கும் அதிகமான அளவில் பல்வேறு சாதிகள் இருப்பதாக காட்டுகின்றன என்றும் அரசு கூறியது.
இதில் கணக்கெடுப்பாளர்கள் ஒரே சாதியினருக்கு வெவ்வேறு உச்சரிப்புகளைப் பயன்படுத்தியதால் முழுக் கணக்கெடுப்பும் பயனற்று போனது.
பல சந்தர்ப்பங்களில் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் தங்கள் சாதியினை வெளிப் படுத்த மறுத்து விட்டனர்.