இந்தியக் கடற்படையானது, தனது புதிய மிகப்பெரிய ஆய்வுக் கப்பலான ”சந்தயாக்” என்ற கப்பலை கொல்கத்தாவில் கடற்படையில் இணைத்தது.
இந்த ஆய்வுக் கப்பல்கள், போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வழிகளை நிர்ணயம் செய்தல் மற்றும் துறைமுகங்களின் முழு அளவிலான கடலோர மற்றும் ஆழ்கடல் அளவிலான நீரியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் திறனுடையவை.
இந்தக் கப்பல்கள் பாதுகாப்புப் பயன்பாடுகளுக்காக வேண்டி கடல்சார் மற்றும் புவியியல் தரவுகளின் தொகுப்பு மற்றும் கடல்சார் எல்லை வரம்புகளின் ஆய்வுகளை மேற்கொள்ளும் திறனுடையவை ஆகும்.
இதன்மூலம் இது நாட்டின் கடல்சார் செயல்திறன்களை மேம்படுத்துகிறது.