TNPSC Thervupettagam

இந்தியா – ரஷ்யா 2+2 பேச்சுவார்த்தை

December 8 , 2021 1360 days 559 0
  • இந்தியா – ரஷ்யா 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையானது புதுடெல்லியில் நடத்தப் பட்டது.
  • இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆகியோரால் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.
  • இது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவை இடையே நடைபெற்ற முதலாவது 2+2 பேச்சு வார்த்தையாகும்.
  • இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழல் பற்றி இரு நாடுகளும் விவாதித்தன.
  • இந்தப் பேச்சுவார்த்தையானது இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டு மேம்பாட்டினை விரிவுபடுத்தியது.
  • இந்தப் பேச்சுவார்த்தையின் போது, 6 லட்சத்திற்கும் அதிகமான அளவில் AK-203 ரக துப்பாக்கிகளை வாங்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்தியா ஈடுபாடு செலுத்தும் பகுதிகள்

  • மத்திய ஆசியாவில் அதிகளவில் ஆக்கப் பூர்வமாக ஈடுபடுவதை இந்தியா முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தன்னிறைவு அடைதல்
  • சுதந்திரமான, தடையற்ற இந்தோ-பசிபிக் பகுதி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்