ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இரட்டை டிஜிட்டல் தளம்
December 8 , 2021 1359 days 549 0
ஒட்டு மொத்த நகர்ப்புற இந்தியாவிற்கான டிஜிட்டல் இரட்டைத் தளத்தை உருவாக்கச் செய்வதற்காக ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ஒரு முழு நகர்ப்புற இந்தியா அளவிலான தனது திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் புத்தாக்கத் திட்டத்தினை நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தொடங்கி வைத்தார்.
மிக துல்லியமான இந்த முப்பரிமாணத் தரவினை உருவாக்குவது, தொலைதொடர்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகாலச் செயல்பாடுகள் ஆகியவற்றில் அடுத்தத் தலைமுறை சார்ந்தக் கட்டமைப்புகளைக் கொண்டு வருவதற்கான செயல்பாட்டுத் திட்டமிடல்கள், ஸ்மார்ட் கார், தளவாடங்கள், இணைய வர்த்தகம் ஆகியவற்றிற்கான அதிக தெளிவுடன் கூடிய வரைபடமிடுதலில் பல பயன்பாடுகள் தொடங்கப்பட வழிவகுக்கும்.