2025-26 ஆம் ஆண்டு தளப் பரிந்துரை சுழற்சிக்காக இந்த ஆண்டு 'பண்டைய பௌத்தத் தளம் - சாரநாத்' என்ற தலைப்பிலான ஆவணத்தை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையத்திடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் படி, எந்தவொரு பரிந்துரை சுழற்சியிலும் தளச் சேர்ப்புச் செயல்முறைக்கு ஒரு தளத்தினை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
1998 ஆம் ஆண்டிலிருந்து யுனெஸ்கோவின் "தற்காலிகப் பட்டியலில்" சாரநாத் உள்ளது.
சாரநாத், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு அருகில் அமைந்துள்ளது.
இது கௌதம புத்தர் ஞானம் பெற்ற பிறகு தனது முதல் பிரசங்கத்தை (தம்மசக்கர பரிவட்டனா) நிகழ்த்தியதாகக் கூறப்படும் ஒரு முக்கிய பௌத்த யாத்திரைத் தலமாகும்.
இது ரிஷிபதானம், மிருகதவா மற்றும் மிருகதயா போன்ற பெயர்களிலும் அழைக்கப் படுகிறது.