இந்த ஆண்டின் செப்டம்பர் 19 ஆம் தேதியானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான சிந்து நதி ஒப்பந்தத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது.
இது 1960 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட, உலக வங்கியினால் நடுநிலை செய்யப்பட்ட, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒரு நதி நீர் விநியோக ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பின்வரும் அம்சங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
இந்தியாவின் “கிழக்கில்” பாயும் 3 நதிகளான பியாஸ், ராவி, சட்லஜ் ஆகியவற்றின் நீரானது இந்தியாவிற்குத் தரப்படுகின்றது.
இந்தியாவின் “மேற்கில்” பாயும் 3 நதிகளான சிந்து, செனாப், ஜீலம் ஆகியவற்றின் நீரானது பாகிஸ்தானிற்குத் தரப்படுகின்றது.