TNPSC Thervupettagam

சிந்து நதி நீர் ஒப்பந்த நடுவண் அமைப்பு

October 28 , 2022 1005 days 527 0
  • கிஷெங்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் நிலையங்கள் தொடர்பாக, ஒரு "நடுநிலை நிபுணர்" மற்றும் நடுவர் நீதிமன்றத்தின் தலைவர் ஆகியோரை உலக வங்கி நியமித்து உள்ளது.
  • 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இரண்டு திட்டங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.
  • இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருடப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 1960 ஆம் ஆண்டில், உலக வங்கியும் ஒரு கையெழுத்துதாரராக உள்ள இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கும் இடையே நதிநீரைப் பயன்படுத்துவது தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு வழிமுறையை நிறுவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்