TNPSC Thervupettagam
August 6 , 2025 15 days 92 0
  • விண்வெளி வீரர் குழுவுடனான உரையாடல்களை மேற்கொள்ளும் நடமாடும் எந்திரம் (சிமோன்) என்பது சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு எந்திரம் (ரோபோ) ஆகும்.
  • இந்தத் திட்டமானது, பணிச்சுமையைக் குறைத்தல், நேரத்தின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நீட்டிக்கப்பட்ட விண்வெளிப் பயணங்களின் போது மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • சிமோன் விண்வெளி நிலையத்திற்குள் சுதந்திரமாகச் செயல்பட்டு, நடைமுறைகள் மற்றும் தகவல்களை எளிதாக அணுகுவதற்காக கை இயக்கமின்றி குரல் வழிக் கட்டுப்பாடு மூலம் செயல்படுகிறது.
  • பராமரிப்பு மற்றும் சோதனைகளின் போது படிப்படியான வழிமுறைகள் அல்லது ஒளிப்படங்களைக் காண்பிப்பதன் மூலம் சிமோன் விண்வெளி வீரர்களுக்கு உதவுகிறது.
  • அறிவியல் பணிகளின் நேரடி அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணப்படுத்தலுக்கான நடமாடும் ஒளிப்படக் கருவியாக இது செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்