சிறப்பான விசாரணைக்கான மத்திய உள்துறை அமைச்சர் விருது
August 16 , 2019 2086 days 689 0
2019 ஆம் ஆண்டிற்கான “சிறப்பான விசாரணைக்காக” மத்திய உள்துறை அமைச்சர் விருது 96 காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக மத்தியப் புலனாய்வு அமைப்புகள், மாநில / ஒன்றியப் பிரதேச காவல் துறை அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.
இந்த விருதானது குற்றவியல் விசாரணையில் உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் முதன்முறையாகத் தோற்றுவிக்கப்பட்டது.