பிரதமரின் சுதந்திர தின உரையின் போது முப்படைகளின் தலைமைத் தளபதி (Chief of Defence Staff – CDS) என்ற பதவி உருவாக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
CDS ஆனது ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளுக்கும் “உயர் மட்டத்தில் திறனுள்ள தலைமைத்துவத்தை” அளிப்பதற்கும் அப்பிரிவுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் உதவுவதற்கான ஒரு உத்தி என்று கூறப்படுகின்றது.
CDS என்பது முப்படைகளின் பணிகளை மேற்பார்வையிட்டு, ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு உயரிய இராணுவப் பதவியாகும்.
போர்க் காலங்களில் CDSன் பங்கு மிக முக்கியமானதாகும்.
CDS என்பவர் நீண்ட கால பாதுகாப்புத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை குறித்து நிர்வாகிக்கு (பிரதம அமைச்சருக்கு) ஒற்றை ஆலோசனை மற்றும் தடையற்ற முப்படைகள் குறித்த பார்வை ஆகியவற்றை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் CDSஐ அமைப்பதற்கான முதலாவது பரிந்துரையானது 2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கார்கில் ஆய்வுக் குழுவிலிருந்து வந்தது.