மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறையினால் சமக்ரா சிக்சா - ஜல் சுரக்சா என்று அழைக்கப்படும் ஒரு புதிய முன்னெடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது நாட்டில் பள்ளிக் குழந்தைகளிடையே தண்ணீர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.