ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசின் நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக ஒரு அரிய இரகசிய ஆலோசனையை (மூடப்பட்ட அறையில்) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் (UNSC - United Nations Security Council) நடத்தியது.
பாகிஸ்தானால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் “காஷ்மீர் பிரச்சினை மீதான இரகசிய ஆலோசனை” நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை சீனா ஆதரித்தது.
UNSC சந்திப்பின் முடிவுகள் முறையான அறிவிப்பாக இல்லாமல் இரகசிய ஆலோசனையாக (Informal in nature) அமைந்தது.
ஆகஸ்ட் மாதத்திற்கான பாதுகாப்பு மன்றத்தின் தலைமை போலந்து நாட்டிடம் உள்ளது.
பெல்ஜியம், கோட்டி டி ஐவரி, டொமினிக்கன் குடியரசு, எக்குவடோரியல் கினியா, ஜெர்மனி, இந்தோனேஷியா, குவைத், பெரு, போலந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை UNSC-ல் தற்பொழுது தற்காலிக உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கின்றன.
காஷ்மீர் பிரச்சினை குறித்து UNSCன் ஒரு முழுச் சந்திப்பானது கடைசியாக 1965 ஆம் ஆண்டில் நடைபெற்றது.