பூடானுக்கு தனது இரண்டாவது முறையாக பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மங்கடெச்சு நீர்மின் ஆற்றல் ஆலையைத் திறந்து வைத்தார்.
இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கிடையே நீர்மின் துறையில் 50 ஆண்டு கால ஒத்துழைப்பை அனுசரிப்பதற்காக அஞ்சல் தலைகளை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
மேலும் இவர் பூடானில் ரூபே அட்டையையும் தொடங்கி வைத்தார்.
பூடானில் தெற்காசியச் செயற்கைக் கோளைப் பயன்படுத்துவதற்காக இஸ்ரோவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புவிக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் சாட்காம் அமைப்பு ஆகியவற்றை மோடி மற்றும் லோடேய் ஷெரிங் (பூட்டானின் பிரதமர்) ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகள் “சகோதரத்துவ ஒப்பந்தம்” ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
மீண்டும் 2007 ஆம் ஆண்டில் பூடானுடனான 1949 ஆம் ஆண்டு ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு புதிய சகோதரத்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புதிய ஒப்பந்தமானது முழுமையான இறையாண்மையுடன் தனது வெளியுறவுக் கொள்கை மீதான இந்தியாவின் வழிகாட்டுதலை பூடான் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை மாற்றியமைக்கின்றது. மேலும் இந்த ஒப்பந்தமானது ஆயுதங்கள் இறக்குமதிக்கான விவகாரத்தில் பூடான் இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் கூறுகின்றது.
2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பூடானுக்கு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.