சிறப்பு நோக்க நிதி - ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்கத் திட்டம்
October 16 , 2025 2 days 27 0
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) நிர்வாகக் குழுவானது வழிகாட்டுதல்களையும் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க (RDI) திட்டத்திற்கான சிறப்பு நோக்க நிதியையும் அங்கீகரித்துள்ளது.
RDI திட்டத்தில், 2025 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 1 லட்சம் கோடி ரூபாய் நிதி அடங்கும்.
நிதியளிப்பானது இரண்டு நிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது:
ANRF அறக்கட்டளையின் கீழ் சிறப்பு நோக்க நிதி, மற்றும்
மாற்று முதலீட்டு நிதிகள், மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற இரண்டாம் நிலை நிதி மேலாண்மை அமைப்புகள்.
தொழில்நுட்பத் தயார்நிலை நிலைகள் 4 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் மாறுதல் மிக்க ஆராய்ச்சிக்கான திட்டச் செலவினங்களில் 50% வரையில் இந்தத் திட்டம் நிதியளிக்கிறது என்பதோடு இதில் மானியங்கள் மற்றும் குறுகிய காலக் கடன்கள் விலக்கப் பட்டுள்ளன.