TNPSC Thervupettagam

பருப்பு வகைகளுக்கான திட்டம் 2025

October 16 , 2025 3 days 27 0
  • 11,440 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பருப்பு வகைகளில் தன்னிறைவு அடைவதற்கான (ஆத்மநிர்பாரத்) திட்டத்தினை (2025–26 முதல் 2030–31 ஆம் ஆண்டு வரை) பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • 2030–31 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டு பருப்பு உற்பத்தியை 350 லட்சம் டன்களாகவும், பருப்புகளின் சாகுபடிப் பரப்பளவை 310 லட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) துவரம் பருப்பு (அர்ஹார்), உளுந்து மற்றும் மசூர் பருப்பு வகைகளை 100 சதவீதம் கொள்முதல் செய்வதை இது உறுதி செய்கிறது.
  • விவசாயிகளுக்கு 88 லட்சம் இலவச விதை தொகுப்புகள் மற்றும் 126 லட்சம் குவிண்டால் அளவிலான சான்றளிக்கப்பட்ட விதைகளை விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்