புதிய அம்சங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான நிகழ்நேர உதவி மற்றும் அரசு திட்டங்களின் ஒருங்கிணைப்புக்காக செயற்கை நுண்ணறிவில் இயங்கும் உரையாடு மென்பொருள் ஆகியவை அடங்கும்.
இந்தச் செயலியானது முதலில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தினால் 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைப்புகளில் அணுகல் சார்ந்த சிக்கல்கள் குறித்து புகாரளிக்கப் பயனர்களை அனுமதிக்கிறது.