TNPSC Thervupettagam

சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைத் திரும்பப் பெறல் – டாக்டர் மன்மோகன் சிங்

August 27 , 2019 2170 days 577 0
  • இந்திய அரசானது முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்கின் சிறப்புப் பாதுகாப்புப் படைப் (Special Protection Group - SPG) பாதுகாப்பைத் திரும்பப் பெற முடிவு செய்திருக்கின்றது.
  • ஆனால் அவர் மத்திய ரிசர்வ் காவல் படையினால் அளிக்கப்படும் உயரிய பாதுகாப்புப் பிரிவான இசட் ப்ளஸ் பாதுகாப்பை வழக்கம் போல் கொண்டிருப்பார்.
  • SPG ஆனது பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவருடைய வாரிசுகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் பணியை ஆற்றவிருக்கின்றது.

இதுபற்றி

  • SPG என்பது பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான மத்திய அரசின் ஒரு ஆயுதப் படையாகும்.
  • இது இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்பு 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • பின்னர் இது சிறப்புப் பாதுகாப்புப் படைச் சட்டம், 1988-ன் கீழ் ஒரு சட்டப் பூர்வ அமைப்பாக உருவெடுத்தது.
  • தொடக்க காலத்தில் SPG ஆனது பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு அளித்தது.
  • ராஜிவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 1991 ஆம் ஆண்டில் இச்சட்டம் திருத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்