சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (திருத்த) மசோதா, 2019
August 3 , 2019 2257 days 957 0
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (திருத்த) மசோதா, 2019 ஆனது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.
இது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005ஐ திருத்துகின்றது.
இதற்கு முந்தைய சட்டத்தின்படி, ஒரு நபர் என்ற வரையறையில் ஒரு தனிநபர், ஒரு இந்து கூட்டுக் குடும்பம், ஒரு நிறுவனம், ஒரு கூட்டுறவு சமூகம், ஒரு தொழிற்சாலை, நபர்களின் கூட்டமைப்பு (சங்கம்) ஆகியவை உள்ளடங்கும்.
இந்த மசோதாவானது இந்த வரையறையில் மேலும் 2 பிரிவுகளைச் சேர்த்துள்ளது. அவையாவன ஒரு அறக்கட்டளை மற்றும் மத்திய அரசினால் அறிவிக்கப்படும் எந்தவொரு இதர நிறுவனங்கள்.