TNPSC Thervupettagam

சிறார் நீதி வாரியங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்

November 28 , 2025 7 days 49 0
  • 362 சிறார் நீதி வாரியங்களில் (JJBs) உள்ள வழக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ளன.
  • 765 மாவட்டங்களுள் சுமார் 92% மாவட்டங்களில் சிறார் நீதி வாரியங்கள் அமைக்கப் பட்டுள்ளன ஆனால் 24% வாரியங்களில் முழுமையாகப் பணியாளர்கள் இல்லை என்ற நிலையில் 30% வாரியங்களில் இணைக்கப்பட்ட சட்ட உதவி பெறும் மையங்கள் இல்லை.
  • JJBகளில் தாக்கல் செய்யப்பட்ட 1,00,904 வழக்குகளில் பாதிக்கும் குறைவானவை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தீர்க்கப்பட்டன.
  • ஒவ்வொரு JJB வாரியத்திலும், காலியிடங்கள், போதுமான நிதி இல்லாதது மற்றும் பலவீனமான தரவுக் கண்காணிப்பு, அதிகரித்து வரும் பணிச்சுமை ஆகியவற்றுடன் ஆண்டுதோறும் சராசரியாக 154 வழக்குகள் இங்கு நிலுவையில் உள்ளன.
  • இந்திய நீதி அறிக்கை (IJR) ஆய்வில் ஒழுங்கற்ற பொதுத் தரவுப் பரிமாற்றம், மோசமான நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட சேவை வழங்கலில் இடைவெளிகள் ஆகியன கண்டறியப்பட்டன.
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்புச் சட்டங்களின் கீழ் 31,365 வழக்குகளில் 40,036 சிறார் கைது செய்யப்பட்டனர்.
  • இந்தச் சிறார்களில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
  • ஒடிசாவில் மிக அதிகபட்சமாக 83% வழக்குகள் நிலுவையில் உள்ளன அதே நேரத்தில் கர்நாடகாவில் மிகக் குறைவாக 35% வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • JJB செயல்பாடுகள் குறித்தத் தரவுகளைச் சேகரிக்க 21 மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைகளை IJR தாக்கல் செய்தது என்ற நிலையில் இது மையப்படுத்தப் பட்ட ஒரு கண்காணிப்பு இல்லாததை எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்